சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா அவரை இன்று நேரில் சந்தித்துப் பேசினார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றதால், இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

​சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த விக்கிரமராஜாவிடம், “வரும் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கப்போகிறீர்களா?” என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “இது தேர்தல் ஆதரவுக்கான சந்திப்பு இல்லை. தமிழகம் முழுவதும் உள்ள வியாபாரிகளின் நீண்டகாலக் கோரிக்கைகள் மற்றும் தேவைகள் குறித்த பட்டியலை அதிமுக தரப்பில் கேட்டிருந்தனர். அதனை வழங்குவதற்காகவே இந்தச் சந்திப்பு நடைபெற்றது. மற்றபடி இதில் அரசியல் ஏதுமில்லை” என்று மிகத் தெளிவாகக் கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.