தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஜய் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடித்த வீர சிம்ஹா ரெட்டி திரைப்படத்தை பார்த்துவிட்டு தன்னை பாராட்டியதாக பேட்டி ஒன்றில் நடிகை வரலட்சுமி சரத்குமார் கூறியுள்ளார்.

தெலுங்கில் முன்னணி ஹீரோவாக இருக்கும் பாலகிருஷ்ணா  நடிப்பில் வீரசிம்ஹா ரெட்டி திரைப்படம் வெளியானது. இந்த படம் 100 கோடி வரை வசூல் சாதனை புரிந்திருந்த நிலையில் ஸ்ருதிஹாசன், ஹனி ரோஸ் மற்றும் வரலட்சுமி சரத்குமார் போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். இந்த படம் 100 கோடி வரை வசூல் சாதனை புரிந்திருந்த நிலையில், நடிகர் விஜய் வீரசிம்ஹா ரெட்டி படத்தை பார்த்துவிட்டு வரலட்சுமி நடிப்பை பாராட்டியுள்ளார். மேலும் நடிகர் விஜய் செல்போனில் மெசேஜ் அனுப்பி தன்னை பாராட்டியதாக வரலட்சுமி சரத்குமார் கூறியுள்ளார்.