விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார் சிவாங்கி. முன்பே அந்த நிகழ்ச்சியில் அவர் கோமாளியாக இருந்த நிலையில், தற்போது குக் ஆக வந்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் வாயிலாக தான் சிவாங்கிக்கு திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சிவாங்கி தனக்கு உடல்நிலை சரியில்லை, எழ கூட முடியவில்லை என தெரிவித்திருக்கிறார். அதாவது “கடந்த 2 நாட்களாக எனக்கு cold மற்றும் ஜுரம். என்னால் எழுந்து நிற்க கூட முடியவில்லை. ஷோ பார்த்த ரசிகர்களிடமிருந்து எனக்கு கிடைத்த அன்பு, என்னை மீண்டும் எழ வைத்து விட்டது. உங்களது அன்பு இன்றி நான் ஒன்றுமே இல்லை” என சிவாங்கி கூறியிருக்கிறார்.