தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் விஜய் வாரிசு படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் த்ரிஷா, பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜுன், சாண்டி மாஸ்டர், சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படம் அக்டோபர் 19-ஆம் தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் லியோ படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் லியோ படத்திற்காக பயன்படுத்தப்படும் அதிநவீன கேமராவின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. பீஸ்ட் திரைப்படத்திற்கு பயன்படுத்தப்பட்டது போன்று தற்போது லியோ படத்திருக்கும் RED எனப்படும் அதிநவீன கேமரா பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் படத்தில் தரமான விஷுவல் ட்ரீட் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் லியோ படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் தற்போது ஒளிப்பதிவாளர் மனோஜ் வெளியிட்ட வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Manoj Paramahamsa (@manojinfilm)