தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் மடோன் அஸ்வின் டைரக்டில் வித்தியாசமான கதைகளைத்துடன் உருவாகி வரும் “மாவீரன்” படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் வெளியாக இருக்கும் இந்த படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, மிஷ்கின் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் வெளியாகிய இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இப்போது வரை இணையதளத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது. இந்நிலையில் ரசிகர்களுக்கு மாவீரன் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க செய்யும் விதமாக இப்படத்தின் படப்பிடிப்பில் மானிட்டரில் இடம்பெற்றிருக்கும் சிவகார்த்திகேயனின் கிளிம்ஸ் வீடியோவானது சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.