தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் டைரக்டில் உருவாகும் படம் லியோ. இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மிஸ்கின் உட்பட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளை முன்னிட்டு தொடர்ந்து லியோ படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளிவந்து கொண்டே இருக்கிறது.

அதன்படி தளபதியுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை லோகேஷ் கனகராஜ் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் லியோ படத்தில் பிரபல நடிகை சாய் பல்லவியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்ததாம். எனினும் அவருக்கான கதாபாத்திரம் வலுவாக இல்லை என்பதால் லியோ படத்தை நிராகரித்து விட்டாராம் சாய் பல்லவி. இச்செய்தி தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.