பாலிவுட் மூத்த நடிகரான சமீர்காகர்(70) மூச்சுத்திணறல் ஏற்பட்டு இன்று திடீரென உயிரிழந்தார். பழம் பெரும் நடிகரான சமீர் காகர், நக்கட் எனும் தொலைக்காட்சி தொடரில் நடித்ததன் வாயிலாக  மிகவும் பிரபலமான நடிகராக மாறினார். இவர் நக்கட் தொடரை தவிர்த்து, சர்க்கஸ், சஞ்சீவானி உள்ளிட்ட சில பிரபலமான தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து உள்ளார்.

அதோடு ஹாசி தோ ஃபேஸி, ஜெய் ஹோ, படேல் கி பஞ்சாபி ஷாதி உள்ளிட்ட பாலிவுட் படங்களிலும் நடித்து உள்ளார். நடிகர் சமீர்காகரின் இறுதிச் சடங்கு அவரது இல்லத்தில் நடைபெறும் என அவருடைய சகோதரர் கூறினார். ரசிகர்களால் கோப்டியா என செல்லமாக அழைக்கப்படும் பழம்பெரும் நடிகர் சமீர் காகர் இறந்தது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.