மாஸ்டர் திரைப்படத்தை அடுத்து தளபதியும், லோகேஷ் கனகராஜூம் இணைந்திருக்கும் லியோ படத்தின் புரொமோ வீடியோ வெளியாகி அப்படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துவிட்டது. இதில் சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன் , மிஷ்கின், திரிஷா உட்பட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிப்பதால் லியோ படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்போது இந்த படத்தின் சூட்டிங் காஷ்மீரில் நடக்கிறது. மாஸ்டர் திரைப்படத்தை போன்று லியோ படத்திலும் விஜய்யின் ஹேர் ஸ்டைல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. முக்கியமாக இப்படத்தில் விஜய்யை வித்தியாசமான கோணத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக 30-க்கும் மேற்பட்ட ஹேர்ஸ்டைலை தயார் செய்து அதில் ஒன்றை தேர்வு செய்து இப்போது நடிக்க வைத்து வருகிறார் லோகேஷ். இந்த ஹேர் ஸ்டைல் தளபதியையும் கவர்ந்து உள்ளதாம்.