தல அஜித்குமார் திரையுலகில் நடிப்பதோடு மட்டுமின்றி ஓய்வு நேரங்களில் மோட்டார்சைக்கிளில் பயணம் மேற்கொண்டு பிரபலமான இடங்களை சுற்றிப்பார்ப்பதை வழக்கமாக வைத்து உள்ளார். அதன்படி கடந்த சில தினங்களாக பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மோட்டார்சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.

இதையடுத்து துணிவு படப்பிடிப்பிற்கு நடுவே இமயமலை பகுதியில் மோட்டார்சைக்கிள் பயணம் மேற்கொண்டு கார்கில் நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்தினார் அஜித். இந்நிலையில் துணிவு திரைப்படத்துக்கு கிடைத்த வரவேற்பால் மகிழ்ச்சியில் இருக்கும் நடிகர் அஜித் உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இவர் ஸ்காட்லாந்தில் கார் ஓட்டிச்செல்லும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.