ஹாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் புரூஸ் வில்லிஸ் (66). இவரது நடிப்பில் வெளியாகிய டைஹார்ட் சீரியஸ் திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்றது. இவர் தன் நடிப்பிற்காக பல விருதுகளை பெற்றுள்ளார். இந்நிலையில் புரூஸ் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த வருடம் சினிமாவை விட்டு விலகினார்.

இந்நிலையில் புரூஸ் வில்லிஸ் மூளை செல் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் கூறியிருப்பதாவது, புரூஸ் வில்லிஸ் மூளை பாதிப்பு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இந்நோய் பாதித்தவர்களின் மூளை செல்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்