மறைத்த பிரபல நடிகரும் இயக்குனரும் ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சருமான என்.டி.ராமராவ் உருவம் பொறிக்கப்பட்ட 100 ரூபாய் மதிப்புடைய வெள்ளி நாணயம் வெளியிடப்பட உள்ளது. மே 28ஆம் தேதி அவரது பிறந்த நாள் நூற்றாண்டையொட்டி அந்த வெள்ளி நாணயத்தின் வெளியீடு காணப்பட உள்ளது. அந்த நாணயம் நினைவுச் சின்னமாக வெளியிடப்படும்.

எனவே சந்தையில் புழக்கத்திற்கு வராது என சொல்லப்படுகிறது. நாணைய வெளியீடு குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் மறைந்த புகழ் பெற்ற பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி உருவம் பொறிக்கப்பட்ட சிறப்பு நாணயம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.