ரிஷப் செட்டி இயக்கி அவரே நடித்திருந்த திரைப்படம் காந்தாரா. கன்னடத்தில் வெளியாகி இத்திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் இப்படம் ரிலீஸ் செய்யப்பட்டது. அனைத்து மொழிகளிலும் வசூலை அள்ளிய இந்த திரைப்படம் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. இத்திரைப்படத்தின் நூறாவது வெற்றி விழா அண்மையில் நடந்து முடிந்தது.

அப்போது பேசிய ரிஷப் செட்டி கூறியுள்ளதாவது, சென்ற வருடம் வெளியான காந்தாரா திரைப்படம் இரண்டாம் பாகம் தான். இத்திரைப்படத்தின் முதல் பாகம் அடுத்த வருடம் ரிலீஸ் ஆகும். இந்தப் பகுதி பல வருடங்களுக்கு முன்பு நடந்த அந்த தெய்வத்தின் பின்னணி குறித்து கூறும் கதைகளமாக அமையும். கதைக்கான பணிகள் தற்போது நடந்து வருவதால் விரைவில் படம் குறித்த அப்டேட் வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.