இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by 𝐀𝐡𝐚𝐦𝐞𝐝 𝐉𝐞𝐫𝐢𝐭𝐡🍃 (@son_of_naturee)

அதாவது அந்த வீடியோவில் வாலிபர் ஒருவர் கரையான் புற்று குறித்து பேசி உள்ளார். அதில் அவர் கூறியதாவது கரையான் புற்று தான் உலகில் மிகச் சிறந்த இன்ஜினியர். ஏனென்றால் நம்ம இப்போதான் அப்பார்ட்மெண்ட் எல்லாம் கட்டுகிறோம். ஆனால் இந்த கரையான்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு அப்பார்ட்மெண்ட்களை கட்ட ஆரம்பித்து விட்டது.

தேனிகள் மாறியே கரையானிலும் ராணி, ஆண், வேலைக்காரர் என்ற கரையான்கள் உள்ளது. வெளியிருக்கும் வெப்பத்தை விட கரையான் புற்றுக்குள் 5 டிகிரி வரை வெப்பம் குறைவாகவே இருக்கும் என்று கூறுகிறார். ஏனென்றால் இந்த கரையான்கள் புற்று கட்டும் பொழுதே எவ்வளவு வெப்பம் உள்ளே வர வேண்டும், எப்படி காற்று வெளியே போக வேண்டும் என்று யோசித்து தான் கட்டுகிறது என்று கூறியுள்ளார்.