உத்தரப்பிரதேசம் லக்னோவில் மனிதாபிமானத்தை மறக்கும் வகையில் கொடூரம் நடைபெற்றுள்ளது. கோமதி நகரின் பத்ரகர்புரம் பகுதியில், 24 வயதான சோனு விஸ்வகர்மா என்ற இளைஞர் தெரு நாயை உணவளித்து கவர்ந்து அருகில் அழைத்துவிட்டு, அதனை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்த அருவருப்பான செயலை அங்கு இருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டதும், அது வைரலாகி பரவியது. பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.
ஆஸ்ரா த ஹெல்பிங் ஹேண்ட்ஸ் என்ற விலங்கு நல அமைப்பு இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் விரைவாக நடவடிக்கை எடுத்து சோனு விஸ்வகர்மாவை கைது செய்தனர். விசாரணையில், ஆகஸ்ட் 7ஆம் தேதி சம்பவம் நடந்தது என்றும், குற்றவாளி சில நேரம் தெரு நாய்களின் அருகே சுற்றித் திரிந்த பின் ஒரு நாயை உணவுடன் கவர்ந்து கொண்டு வந்து வன்கொடுமை செய்தது தெரியவந்தது. அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததும், அவன் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
தற்போது, விலங்கு கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியதுடன், விலங்குகளுக்கு எதிரான கொடுமைக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பிலிருந்தும் வலியுறுத்தப்படுகிறது.
