உத்தரப்பிரதேசம் கான்பூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம், தாபாக்கள் மற்றும் உணவகங்களில் வழங்கப்படும் உணவின் சுகாதார தரத்தைப் பற்றி கடும் கேள்வி எழுப்பியுள்ளது.
கான்பூரின் சௌபேபூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள தாபா ஒன்றில், வாடிக்கையாளர் ஆர்டர் செய்த தந்தூரி ரொட்டிக்குள் இறந்த பல்லி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பல்லி ரொட்டியுடன் சேர்த்து சுடப்பட்டதால், அது ரொட்டியின் உள்ளே ஆழமாக சிக்கியிருந்தது. இதனால், சாப்பிடும் முன் கண்ணில் படாமல் போனது. சம்பவத்தின் போது, அந்த நபர் தனது குடும்பத்தினருடன் தாபாவில் இரவு உணவு எடுத்துக் கொண்டிருந்தார்.
வீடியோவில், ரொட்டிக்குள் சிக்கியிருந்த பல்லியைக் காட்டி வாடிக்கையாளர்கள் தாபா உரிமையாளரிடம் வாக்குவாதம் செய்யும் காட்சி வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட நபர், ரொட்டி சாப்பிட்ட பிறகு வாந்தி எடுக்கத் தொடங்கியதாகவும், உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். இந்த சம்பவம் தாபா மற்றும் சாலை ஓர உணவகங்களில் பராமரிக்கப்படும் சுகாதார நிலைமை குறித்த பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
कानपुर
➡ग्राहकों के सेहत के साथ खिलवाड़
➡ग्राहक की थाली में निकली छिपकली
➡ढाबे पर खाने के दौरान निकली छिपकली
➡खाने के बाद ग्राहक को हुई उल्टियां
➡कारीगर ने रोटी के साथ सेक दी थी छिपकली
➡रोटी के साथ ही सेक दी थी तंदूर में छिपकली
➡चौबेपुर थाना क्षेत्र के बाजपेई ढाबा रमैया… pic.twitter.com/y8okiVqXJQ— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) August 9, 2025
“>
சம்பவம் குறித்து சுகாதாரத் துறைக்கு புகார் அளிக்கப்பட்டதாகவும், அதன் பேரில் சம்பந்தப்பட்ட தாபாவுக்கு எதிராக விசாரணை தொடங்கப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உணவின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்த அலட்சியம், வாடிக்கையாளர்களின் ஆரோக்கியத்துக்கு நேரடி ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில், இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
