புதுக்கோட்டை மாவட்டம் பிலிப்பட்டி அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகள் கரூர் அருகே நடைபெற்ற விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டனர். இதனையடுத்து காவிரி ஆற்றில் குளித்த போது மாணவிகள் லாவண்யா, தமிழரசி, சோபியா, இனியா ஆகிய நான்கு பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாணவிகளை அழைத்துச் சென்ற ஆசிரியர்கள் திலகவதி, செபாசகேயுன், பள்ளியின் தலைமை ஆசிரியை பொட்டுமணி ஆகியோரை அஜாக்கிரதையாக இருந்த குற்றத்திற்காக பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார். மேலும் ஆசிரியர் செபாசகேயுன் அஜாக்கிரதையாக செயல்பட்டதாக மாயனூர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் செபாசகேயுனை கைது செய்தனர்.