இந்தியா முழுவதும் கடந்த 5-ம் தேதி தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் 32,000 இந்து மத பெண்களை இஸ்லாம் மதத்திற்கு மதமாற்றி பயங்கரவாத அமைப்பில் சேர்த்தது போன்று இருக்கிறது. இதன் காரணமாக கேரள மாநிலத்தை இழிவு படுத்தி காண்பிப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் உட்பட பல அரசியல் கட்சி தலைவர்கள்  எதிர்ப்பு தெரிவித்து  வருகிறார்கள்.

இந்த படத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி உட்பட பாஜக கட்சியினர் ஆதரவு கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு வரி விலக்கு வழங்கப்பட்ட நிலையில், தற்போது உத்திரபிரதேசம் மாநிலத்திலும் கேரளா ஸ்டோரி படத்திற்கு வரி விலக்கு வழங்கப்படுவதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.