இந்தியா முழுவதும் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்களை கடந்து சென்று இஸ்லாமிய மதத்துக்கு மதமாறச் செய்து பயங்கரவாதிகளாக மாற்றுவதுதான் தான் படத்தின் கதையாக அமைந்துள்ளது. இந்த படத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உட்பட பல அரசியல் கட்சி தலைவர்களும் பல இஸ்லாம் அமைப்புகளும் கட்டணங்களை தெரிவித்து வருகிறது.

இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கேரளா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் படத்திற்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துவிட்டனர். இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டதோடு  அந்த மனுவை அவசரமனுவாக விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது மனுவிற்கு ஹைகோர்ட் என்ன தீர்ப்பு வழங்கியது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஐகோர்ட் தடை விதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது என கூறப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதிகள் வருகின்ற 15-ஆம் விசாரணை நடத்துவதாக அறிவித்தனர்.