தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் துணிவு படத்தை தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தின் சூட்டிங் ஜூன் மாதத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் அஜித் நேபாளம் மற்றும் பூடான் போன்ற இடங்களில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது. இந்நிலையில் நடிகர் அஜித் தன்னுடைய இரண்டாம் கட்ட உலக சுற்றுப்பயணத்தை நவம்பர் மாதத்தில் தொடங்குவார் என தற்போது அவருடைய மேலாளர் சுரேஷ் சந்திரா அறிவித்துள்ளார். மேலும் இதன் காரணமாக நடிகர் அஜித்தின் ரசிகர்கள் உலக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தகவலை வரைபடத்தில் அஜித் நிற்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து கொண்டாடி வருகிறார்கள்.