செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடிஜி அவர்கள் ஜார்கண்ட் மாநிலத்தில் ராஞ்சியில் வளர்ந்த பாரதத்தை நோக்கி  பயணம் என்ற  யாத்திரை  வருகின்ற நவம்பர் 15ஆம் தேதி அன்றைக்கு இந்தியா முழுவதும் தொடங்கப்பட இருக்கிறது.  கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் 2.5 லட்சத்திற்கும் அதிகமான கிராமங்களில் நாடு முழுவதும் இந்த யாத்திரை செல்ல இருக்கிறது.

கிட்டத்தட்ட 18,000 நகரப் பகுதிகளில் நாடு முழுவதும் சொல்ல இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 12,500 கிராமங்கள்… 1455 நகர் பகுதிகளில் இந்த யாத்திரை செல்கிறது. 20ஆம் தேதியிலிருந்து நகர ப்புறங்களில் 11 வேன்…. கிராமப்புறங்களில் 100க்கும் மேற்பட்ட வேன்கள்….

ஜனவரி 25ஆம் தேதி வரையிலும் இந்த யாத்திரை மக்களிடத்திலே நேரடியாக மத்திய அரசாங்கத்தின் உடைய திட்டங்களை எடுத்து செல்லக்கூடியதாக இருக்கிறது. குறிப்பாக மலைவாழ் மக்கள் அதிகமாக இருக்கின்ற சேலம் மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டம், நீலகிரி மாவட்டம் என நவம்பர் 15ஆம் தேதி  சேலத்தில் கிட்டத்தட்ட 145 மலைவாழ் கிராமங்கள்,

திருவண்ணாமலையில் 103, நீலகிரியில் 11 கிராமங்கள் உள்ளன. வளர்ச்சி அடைந்த பாரதம் அதாவது  2047 இல் நாட்டின் 100ஆவது  சுதந்திர தினம் கொண்டாடும்போது நம்முடைய பாரத தேசம் ஒரு வளர்ச்சி அடைந்த நாடாக இருக்க வேண்டும். அதை நோக்கின பயணமாக நம்முடைய பயணங்களை தொடங்கி கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார்.