திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, தமிழகத்திலே காவல் துறையின் அத்துமீறல், பாரபட்சமான அரசியல் நடவடிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து போலீஸ் யூனிபார்மை மாத்திடுவாங்களோனு பயமா வேற இருக்கு…  கருப்பு,  சிவப்பு துண்டு போட்டுக்கணும். அப்படி எல்லாம் இந்த அரசாங்கம் சொல்லிட கூடாது…

அமர் பிரசாத் ரெட்டி ஸ்பார்ட்லையே இல்ல, அமர் பிரசாத் ரெட்டி மேலே கேஸ்… இப்ப எங்க பாத்தீங்கனா…  நேற்றைய தினம் முன்னாள் மாவட்ட தலைவர் டாக்டர் ஸ்ரீதர் அவர்களுடைய நினைவு நாள். அதுக்கு ஊர்வலம் போனாங்கன்னு மண்டல் தலைவர் ராஜேஷ் குமார் மேல மற்றும் 18 பேர் மேல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

FIR போட்டி இருக்காங்க.. மேஜிஸ்ரேட் கிட்ட கூட்டிட்டு போயிருக்காங்க. அதே மாதிரி மூணு நாள் முன்னாடி புகழ் மஜேந்திரன் நம்முடைய ஐடி விங் மாநில செயலாளர் அவர்….  சோசியல் மீடியா பதிவுக்காக கைது செய்யப்பட்டுள்ளார். இதே மாதிரி திருச்சி நகர் தலைவர்  ராஜசேகர் மேல பல வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இது தவிர நீங்க பார்த்தீங்கன்னு சொன்னால்,  பாரதிய ஜனதா கட்சியின் மீது டார்கெட்டட் அட்டாக் என பேசினார்.