தமிழ்நாட்டில் 20 தொகுதிகளில் பாஜக நேரடியாக போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். அதன்படி, பாஜக – 20, பாமக 10, அமமுக -2, ஐஜேகே -1, புதிய நீதிக் கட்சி 1. ஜான் பாண்டியன் – 1, தேவநாதன் – 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, தமாகாவிற்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும், 4 கூட்டணி கட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.