மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 9 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டது. அதில், தூத்துக்குடி தொகுதியில் நயினார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்தத் தொகுதியை ஏற்கெனவே தமாகாவுக்கு பாஜக வழங்கியிருந்த நிலையில், குளறுபடி ஏற்பட்டது. இதையடுத்து மறு அறிவிப்பை வெளியிட்ட பாஜக, நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது