பிகில், படைவீரர், லிப்ட், காபி வித் காதல், வணக்கம்டா மாப்பிள்ளை ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் அமிர்தா ஐயர். இவர் கோவை பிஎன் புதூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவர் நிரூபர்களிடம் கூறியிருப்பதாவது “நான் அடுத்ததாக அனுமன் எனும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறேன். இதற்கிடையில் தமிழ் திரைப்படத்தில் நடிப்பதற்காக கதைகள் கேட்டு வருகிறேன்.

தமிழ் திரையுலகில் ஹீரோயினிகளிடம் வேறுபாடு பார்ப்பதில்லை. திறமையுள்ள நடிகைகள் அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. கோவைக்கு நான் சிறுவயதிலிருந்தே வந்து கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு முறை வரும்போதும் புது அனுபவமாக இருக்கிறது. எனக்கு கோவை உணவு எனில் மிகவும் பிடிக்கும்” என்று அவர் கூறினார்.