நடிகை சமந்தா-விஜய் தேவரகொண்டா நடிப்பில் டைரக்டர் ஷிவா நிர்வாணா இயக்கும் “குஷி” படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் சூட்டிங் 60% முடிவடைந்த சூழ்நிலையில், சமந்தா தசையழற்சி நோய் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டடார். இதனால் படப்பிடிப்பு பாதிக்கப்படைந்தது.

இந்த நிலையில் குஷி திரைப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இதுகுறித்த பிற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.