தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் குமாரின் அடுத்த திரைப்படத்தை யார் இயக்குவது என கேள்வி எழுந்து வந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் விக்னேஷ் சிவன் படத்திலிருந்து விலகுவதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் அஜித்தின் அடுத்த திரைப்படத்தை கழகத் தலைவன், தடம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் இடையே பேசப்பட்டு வருகின்றது.