அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யும். சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகபட்சம் 34 டிகிரி, குறைந்தபட்சம் 27 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.