அபுதாபி டி10 லீக் தொடரில், முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹித் அப்ரிடி ஷாநவாஸ் தஹானியுடன் போட்டி முடிந்த பிறகு கைகுலுக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக, இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நிலவும் அரசியல் பதற்றம் காரணமாக, இரு நாடுகளின் வீரர்களும் போட்டிக்குப் பிறகு கைகுலுக்குவதைத் தவிர்த்து வரும் நிலையில், ஹர்பஜனின் இந்தச் செயல் கவனத்தை ஈர்த்தது.
Harbhajan Singh shaking hands with Shahnawaz Dahani. Seems like no handshake policy is only for those wearing Pakistani shirt. pic.twitter.com/EqtsxQlSds
— Taimoor Zaman (@taimoor_ze) November 19, 2025
குறிப்பாக, சில மாதங்களுக்கு முன் தேசிய உணர்வுகளைக் காரணம் காட்டி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாட மறுத்து விலகிய ஹர்பஜன் சிங்கே, இப்போது தஹானியுடன் கைகுலுக்கியது முரண்பாடாக உள்ளதாகச் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஹர்பஜனின் அணி தோல்வியடைந்த பின்னும், விளையாட்டு உணர்வை வெளிப்படுத்தும் விதமாக நடந்த இந்தச் செயல், அரசியல் மற்றும் விளையாட்டுப் பகைகளுக்கு மத்தியில் தனிப்பட்ட மரியாதையை நிலைநாட்டும் ஒரு அரிய தருணமாகப் பார்க்கப்படுகிறது.
