பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருடந்தோறும் மதுரை அவனியாபுரத்திலும், அதற்கு மறுநாள் பாலமேட்டிலும், 3வது நாள் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். இன்று மதுரை மாவட்டம் பாலமேடு மஞ்சமலை சுவாமி ஆற்று திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதேபோன்று திருச்சி மாவட்டம் சூரியூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.
இந்த நிலையில் இப்போட்டியை காணவந்த புதுக்கோட்டையை சேர்ந்த அரவிந்த்(25) என்பவர் காளை முட்டியதில் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அரவிந்த் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோல் இன்று பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 9 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜன் காளை முட்டியதில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.