திருச்சி லால்குடி தாளக்குடி கீரமங்கலம் கிழக்குத் தெரு பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவருக்கு சதீஷ்குமார் (27) என்ற மகன் இருந்தார். இவர் சென்ற வருடம் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றார். அப்போது அவரை மாடு முட்டியதில் அவரது வயிற்றின் உள் பாகத்தில் படுகாயம் ஏற்பட்டது. இதற்காக பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் பூரண நலம் பெற முடியவில்லை.

இதனால் நடப்பு ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியில் சதீஷ்குமார் பங்கேற்க முடியாத நிலையும் ஏற்பட்டது. இதன் காரணமாக விரக்தியடைந்த சதீஷ்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக  அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.