இந்தியாவின் தலைநகரான டெல்லியில் உள்ள துவாரகா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனே தீயணைப்புத் துறையினருக்கு இது குறித்து தகவல் அளிக்கப்பட்டது.

அந்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் அப்பகுதியில் நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனிடையே அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் 7ஆவது மாடியில் உள்ள பால்கனியிலிருந்து யாஷ் யாதவ் மற்றும் அவரது மகன் (10), மகள் ஆகிய 3 பேரும் தீயில் இருந்து தப்பிக்க குதித்துள்ளனர்.

அதனால் மூவரும் படுகாயம் அடைந்தனர். உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு 3 பேரும் அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும் அந்தத் தீ விபத்தில் சிக்கி இருந்த யாதவின் மனைவியும் ,மூத்த மகனும் சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினர். தற்போது லேசாக ஏற்பட்ட தீக்காயங்களால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.