உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி பகுதியில், திருமணமாகி வெறும் 4 மாதங்களே ஆன இளம் பெண் ஒருவர் தனது படுக்கையறையில் சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து உயிரிழப்பதற்கு முன்னதாக தனது சகோதரருக்கு கடைசி முறையாக அழைத்த அந்தப் பெண், “அண்ணா, என்னை இங்கிருந்து கூட்டிச் சென்று விடுங்கள், இங்கு எதுவும் சரியாக இல்லை” என்று கதறி அழுதுள்ளார். மறுநாள் காலையில் அவர் படுக்கையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மரணத்தில் மர்மம் நீடிக்கிறது.

இச்சம்பவம் குறித்து பெண்ணின் பெற்றோர் தரப்பில் கடும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மாப்பிள்ளை வீட்டாரால் ஏசி, கூலர் மற்றும் கூடுதல் வரதட்சணை கேட்டு அந்தப் பெண் தொடர்ந்து கொடுமைப்படுத்தப்பட்டு வந்ததாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதோடு வரதட்சணை கொடுமையே இந்த மரணத்திற்கு முக்கியக் காரணம் என பெண்ணின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ள நிலையில், இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.