பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி இடையே உட்கட்சி மோதல் நீடித்து வருகிறது. இதில் யாருக்கு கட்சி அதிகாரம் என்ற போட்டியும் நிலவி வருகிறது. இந்நிலையில் சற்று முன் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் சென்னை தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டிற்கு நேரில் சென்ற அங்கு அவரை சந்தித்து பேசினார்.

அப்போது கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுகவுடன் மீண்டும் பாமக கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.