கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக, திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேரடி தொடர்பு உள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தக் கோணத்தில், தவெக பிரசார மேலாண்மை பொது செயலாளராக உள்ள ஆதவ் அர்ஜுனா, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் சற்றுமுன் மனு தாக்கல் செய்தார்.
அதில், “திமுகவின் செந்தில்பாலாஜி மீது கருத்துக்களை தெரிவித்த பிறகு தான் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. அதேபோன்று, பிரசார கூட்டத்திற்குச் செல்லும் வழியில் கற்கள் வீசப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை நேரில் சந்திக்க முயன்ற போதும், போலீசாரால் அனுமதி மறுக்கப்பட்டது” என்றும் மனுவில் ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டியுள்ளார். இந்த மனுவை உயர் நீதிமன்றம் ஏற்கும் பட்சத்தில், விரைவில் விசாரணைக்கு வரலாம் என தெரிவிக்கப்படுகிறது. இந்த விவகாரம் அரசியல் ரீதியாக மேலும் தீவிரம் அடைந்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது.
