விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பஞ்சமாதேவி கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இந்த கோழி பண்ணையில் ஆயிரக்கணக்கான கோழிக்குஞ்சுகள் வளர்ந்து வந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாலை நேரத்தில் திடீரென கோழிப்பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டு காற்றின் வேகம் காரணமாக மளமளவென அனைத்து இடங்களுக்கும் பரவியது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கிருஷ்ணமூர்த்தி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு வரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பண்ணையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் சுமார் 3000 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி இறந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.