
சென்னை தாம்பரம் பகுதியில் பிரகிடா (70) மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று மாங்காடு பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து திருட சென்றுள்ளார். அப்போது அங்குள்ள வீடு ஒன்றில் திருடி விட்டு வெளியே வந்த அவரை பார்த்த வீட்டின் உரிமையாளர் அவரை தடுக்க முயன்றுள்ளார்.
ஆனால் அந்த மூதாட்டி அவரை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பு ஓட முயற்சித்துள்ளார். இதனால் வீட்டின் உரிமையாளர் கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார். இவரது சத்தத்தை கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடி வந்து மூதாட்டியை மடக்கி பிடித்தனர்.
இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூதாட்டியிடம் விசாரணை நடத்தியதுடன் அவரை சோதனை செய்தனர். இதில் அவரிடம் 4 பவுன் தங்கம் இருந்தது தெரியவந்தது. மேலும் காவல்துறையினர் அவரிடம் சோதனை நடத்தியதில் பைபிள் ஒன்றை கண்டுபிடித்தனர்.
அதில் மாங்காடு பகுதியில் யார், யார் வீட்டுக்குள் புகுந்து திருட வேண்டும் என்ற பட்டியல் அவர் வைத்திருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.