நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியில் வசித்து வருபவர் ரவிக்குமார். இவருக்கு ராகுல் (20) என்ற மகன் இருந்துள்ளார். ராகுல் ராசிபுரம் அருகில் உள்ள திருவள்ளுவர் கலைக்கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். அதே பகுதிக்கு அருகில் சேந்தமங்கலம் பகுதியில் வசித்து வரும் லோகநாதனின் மகன் பூந்தமிழன்(20) இவர் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வருகிறார். ராகுலும், பூந்தமிழனும் நெருங்கிய நண்பர்கள். இந்த நிலையில் சம்பவ நாளன்று இருவரும் பைக்கில் கல்லூரிக்கு புறப்பட்டு உள்ளனர்.
ராகுல் தனது நண்பன் பூந்தமிழனை திருச்செங்கோட்டில் உள்ள கல்லூரியில் இறக்கி விடுவதற்காக சென்றுள்ளார். இருவரும் பைக்கில் எலச்சிபாளையம் அருகே நல்லாம்பாளையம் ரேஷன் கடை ரோட்டில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென எதிர்பாராத விதமாக பைக் தனது கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த தனியார் பேருந்து மீது வேகமாக சென்று மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்துள்ளனர்.
இது குறித்து அறிந்த எலச்சிபாளையம் காவல்துறையினர் விரைந்து சென்று இருவரின் உடல்களையும் மீட்டு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் இது குறித்து அப்போதில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு மாணவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது கல்லூரி மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.