கிருஷ்ணகிரி மாவட்டம் காந்திகுப்பம் பகுதியில் மேரி ஸ்டெல்லா (50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் காவல் நிலைய அலுவலக வேலை காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார். இதற்காக இவர் வாணியம்பாடி ரயில் நிலையத்திலிருந்து, சென்னை செல்வதற்கு திட்டமிட்டு இருந்தார். அதன்படி வாணியம்பாடி நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
அப்போது அங்கு இருந்து வந்த ஆலப்புழா-தன்பாத் விரைவு ரயில் மேரியின் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.