விக்கிரவாண்டி அருகே வாக்கூர் பள்ளியில் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் கருணாகரனை விழுப்புரம் மகளிர் போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து கருணாகரனை விழுப்புரம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கவுசர் சஸ்பெண்ட் செய்தார். 100க்கும் மேற்பட்ட பெற்றோர்கள், கருணாகரன் குற்றமற்றவர் என்று கூறி, குற்றச்சாட்டை கைவிட்டு அவரை மீண்டும் பணியில் சேர்க்க வலியுறுத்தி பள்ளிக்கு வருகை தந்தனர்.

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், தங்கள் குழந்தைகளை வேறு இடத்தில் சேர்த்துவிடுவோம் என மிரட்டினர். மாவட்ட கல்வி அலுவலர் கவுசருடன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து, பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.

இதையடுத்து, விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்துக்கு மாணவர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து கேட்டை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர். 10 பெற்றோர்கள் மற்றும் 5 மாணவர்களை கூடுதல் பேச்சுவார்த்தைக்காக உள்ளே அனுமதித்ததால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவத்தன்று பள்ளியில் படிக்கும் 157 மாணவர்களில் 6 பேர் மட்டுமே பள்ளிக்கு சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.