மதுரை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. மலைமேல் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உள்ள முருகனின் கையில் 3 அடி உயரத்தில் வேல் ஒன்று இருந்துள்ளது. இந்த வேலை நேற்று இரவு கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் திருடிவிட்டு சென்றுள்ளனர். அதோடு கோவிலில் இருந்த குத்து விளக்கு போன்ற பொருட்களையும் கொள்ளை அடித்துள்ளனர்.
தங்கள் முகம் சிசிடிவி கேமராவில் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கோவிலில் இருந்த விபூதியை எடுத்து சிசிடிவி கேமராவில் பூசி உள்ளனர். அதோடு அங்கிருந்த ஹார்ட் டிஸ்கையும் திருடி சென்றுள்ளனர். இது குறித்து கோவில் நிர்வாகத்தினர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மற்றும் தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த கைரேகைகளை ஆய்வு செய்தனர். மேலும் கோவில் பொருட்களை திருடி விட்டுச் சென்ற மர்ம நபர்களை தற்போது போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.