செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, கடந்த வாரத்தில் திமுகவினுடைய நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் அவர்களுடைய நிறுவனங்களை ஆய்வு செய்தபோது,  போலி மதுபான  ஆலையை…  அரசினுடைய அனுமதியே இல்லாமல் ஒரு ஆலையை  நடத்தி வந்த செய்தி வெளியாகியுள்ளது.

இதைவிட தமிழ்நாட்டில் கேடு என்ன இருக்க முடியும் ? கேவலம் என்ன இருக்க முடியும் ? ஒரு ஆளுங்கட்சியின் உடைய நாடாளுமன்ற உறுப்பினரே தமிழ்நாட்டில் போலி மதுபான ஆலையை நடத்தி வருகிறார் என்று சொன்னால் ? அது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் இதுநாள் வரை விளக்கமளிக்காதது என்ன காரணம் ?

செந்தில் பாலாஜி அவர்களை கைது செய்தபோது அரசியலில் பழிவாங்க கூடிய நடவடிக்கை என்று பூமிக்கும், வானத்துக்கும்  தமிழக முதலமைச்சர் குதித்தாரே… இன்று அமலாக்கத்துறை மூலமாக  ஒரு வாரத்திற்கு மேலாக ஜெகத்ரட்சகன் அவர்களுடைய நிறுவனங்களில் ஆய்வு செய்த பிறகு  இதுபோல 500 கோடி ரூபாய்க்கு மேலாக வரி ஏய்ப்பு நடைபெற்று இருக்கிறது..  அரசனுடைய அனுமதி பெறாமலேயே,  மது ஆலையை நடத்துகிறார்கள் என்ற ஒரு மிகப்பெரிய ஊழலை செயல்படுத்தி இருக்காரு என தெரிவித்தார்.