திமுக சார்பில் நடைபெற்ற விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒன்றிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்தியாவினுடைய எந்த மாநிலத்துக்கு சென்றாலும்  நம்முடைய தலைவரை பற்றியும்,  நம்முடைய அரசை பற்றியும்,  திராவிட முன்னேற்றக் கழகத்தை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார். அவருக்கு எப்ப பார்த்தாலும் நம்ம நியாபகம் தான். அவரு என்ன சொல்றார்?

திமுகவுக்கு வாக்களித்தால் கலைஞர் குடும்பம் தான் வாழ்கிறது என்கிறார். ஆமாம்..!  நான் சொல்கின்றேன்…  தமிழ்நாடு முழுவதும் நம்முடைய கலைஞரின் குடும்பம் தான். நான் இப்போது உங்களை பார்த்து குறிப்பிட்டு கேட்கின்றேன். ஒன்றிய பிரதமர் நரேந்திர மோடி அவர்களே…  ஒன்பது ஆண்டுகாலம் ஆட்சி செய்திருக்கிறீர்களே,  நீங்கள் என்னத்த செஞ்சி கிழிச்சீங்க ? ஒவ்வொருத்தருடைய வங்கி கணக்குல 15 லட்சம் போடுறேன்னு சொன்னீங்க,  போட்டிங்களா ?

குறைஞ்சது ஒரு 15 காசாவது போட்டிங்களா,  எதுவுமே பண்ணல. ஆனால் உங்களுடைய 9 ஆண்டு கால ஆட்சியில் வாழ்ந்தது ஒரே ஒரு குடும்பம் தான். யார் அந்த குடும்பம் ? உங்களுடைய நெருங்கிய நண்பர் திரு. அதானி அவர்கள்.  அரசிடம் இருக்கக்கூடிய அனைத்து பொதுதுறையையும் தூக்கி அதானி கைல கொடுத்தாச்சி.

அதானி  ஏர்போர்ட் வந்துருச்சு… அதானி ரயில்வே வந்துடுச்சி. அதானி சாலைகள் வந்திருச்சு. அதானி மின்சாரம், அதானி  துறைமுகம். இப்படி அனைத்தும் அதானிக்கு தூக்கி கொடுத்துட்டாரு. நான் கூட பலமுறை நகைச்சுவையாக சொல்வதுண்டு. திரு. மோடி அவர்கள் தொடர்ந்து வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு இருப்பாரு.

விமானத்தில் போறீங்க… விமானி இல்லாம கூட போவீங்க… ஆனால் அதானி இல்லாம போக மாட்டீங்கன்னு…  இதைத்தான் நம்முடைய காங்கிரஸ் பேரியக்க  தலைவர் சகோதரர் ராகுல் காந்தி  ஆதாரத்தோடு நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்டார். ஆனால் இப்போ வரைக்கும் அதற்கு பதில் கிடையாது என தெரிவித்தார்.