செய்தியாளரிடம் பேசிய திருநாவுக்கரசர் எம்.பி, உங்களுக்கு எந்த கட்சி பிடிக்குமோ…. யாருக்கு ஆதரவு கொடுக்குறீங்களோ….  அதுக்கு தக்கன சில பேர் எழுதி இருக்கீங்க…  எல்லாரும் மனுசங்க தானே…. அவங்களுக்கு விருப்பு வெறுப்பு இருக்கு…  என்னை பிடித்தாள் நல்லா எழுதுவீங்க…. பிடிக்கலைன்னா தப்பா எழுதுவீங்க….  சோனியா காந்தியை  வைத்துக் கொண்டு தர்க்கமோ,  வாதமோ செய்யவில்லை. முக்கிய தலைவர் மேடத்தை வைத்துக்கொண்டு அந்த மாதிரி சண்டை போடுற அநாகரிகமான கல்ச்சர்ல யாரும் காங்கிரஸில் கிடையாது. அதே மாதிரி ஒருத்தருக்கு ஒருத்தர் திட்டிக்கிறது, தாக்கிகொள்வது அந்த மாதிரி சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைய செய்துள்ளோம்…   பாத்திங்களா… புத்தகம் போட்டு தேர்தல் நேரத்தில் விநியோகம் பண்ணுவோம்….

திருச்சியில்  பத்து வருஷத்துக்கு மேல தொங்கு போலாமா கிடந்த பாலத்தில் இருந்து….. சுற்றுச்சுவர் ரோட்டில் இருந்து…. ஐடி பார்க்கில் இருந்து…. பஸ் ஸ்டாண்ட்ல இருந்து…. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு…  திமுக உடைய முதலமைச்சர் துணையோடு…… அமைச்சர்களோடு துணையோடு….. தேர்தல் நேரத்தில் நாங்கள் சொன்ன வாக்குறுதிகள்…. அதுல  ஐ.டி பார்க் வேணும்ன்னு சொன்னோம்…   ஐடி பார்க் வந்திருக்கு… சுற்று சாலை வந்து இருக்கு… புதிய பேருந்து நிலையம் வரணும்ன்னு சொன்னோம், வந்துருக்கு…  பணி நடந்துகிட்டு இருக்கு…

மாதிரி விமான நிலையம் விரிவாக்கம் நடந்திருக்கு….  புது ட்ரெயின் நிறைய வந்திருக்கு…. புது பிளைட் நிறைய வந்து இருக்கு…. அடிஷனல்  ஏர்போர்ட்  ஜனவரியில் திறக்குறோம்…  இந்த மாதிரி பல்வேறு விதமான வசதிகள் நடந்திருக்கு….  ஏறக்குறைய 1000 கோடி ரூபாய்ல பல்வேறு விதமான வளர்ச்சி  நகரத்துக்குள்ள நடந்திருக்கு… மத்திய அரசின் துணையோடு  நடக்குது….   புதுக்கோட்டையை  பொறுத்த வரைக்கும் புதுக்கோட்டையில் அங்கங்க எம்பி நிதியில் இருந்து நிறைய இடங்களில் மின்விளக்கு,  பஸ் ஸ்டாண்ட், சின்ன சின்ன ரேஷன் கடைகள், சமுதாய நலக்கூடங்கள், நாடக மேடைகள் காவிரி  குண்டார் திட்ட பணி நடந்துகிட்டு கொண்டிருக்கிறது….

இது எல்லாம் எம்பியாக என்னுடைய  தனிப்பட்ட முயற்சியில்  நடந்தது என்று சொல்லவில்லை. இதெல்லாம் கூட்டு முயற்சியால்… சிலவற்றை மத்திய அரசு செய்யணும்… சிலவற்றை  மாநில அரசு செய்யணும். MP-க்குன்னு சில  கடமைகள் இருக்கு. மக்கள் பிரதிநிதிகளுக்கு… பஞ்சாயத்து  பிரசிடென்ட்ல  இருந்து… ஒன்றிய கவுன்சிலில் இருந்து… சேர்மேனில் இருந்து… மாவட்ட கவுன்சில இருந்து…. மாவட்ட சேர்மன்ல இருந்து… எம்எல்ஏ இருந்து….. மந்திரியிலிருந்து….. அதே மாதிரி எங்களுக்கு எம்எல்ஏக்கள், எம்.பிக்கள்  ஒவ்வொருத்தருக்கும் நிதி வருது என தெரிவித்தார்.