செய்தியாளர்களிடம் பேசிய வேலூர் இப்ராஹிம்,  திரு. அண்ணாமலை அவர்களுடைய இல்லத்தின் அருகில் இருந்த அந்த கொடிக்கம்பத்தை,  காவல்துறையினர் வேண்டுமென்றே அகற்ற வேண்டும் என்று முடிவெடுத்தபோது….  இயல்பான உணர்வுள்ள ஒவ்வொரு பாரதிய ஜனதா கட்சியினுடைய நிர்வாகிகளும் அங்கு திரளாக ஒன்றிணைம் போது….  காட்டுமிராண்டித்தனமாக காவல்துறையினர் கடுமையான முறையிலே எங்களுடைய நிர்வாகிகளை தாக்கி,  பல நிர்வாகிகள் ரத்தம் சிந்தி இருக்கிறார்கள.

நிச்சயமாக திமுக காவல்துறை இதற்கு பொறுப்பேற்க வேண்டும். திரு. ஸ்டாலின் அவர்கள் விதைத்த இந்த வினைக்கு நிச்சயமாக அவர் அறுவடை செய்யக்கூடியது மிகப்பெரிய மோசமான நிகழ்வாக இருக்கும் என்று நாங்கள் பகிரங்கமாக எங்களுடைய கண்டனத்தை தெரிவிக்கின்றோம். காவல் துறையை வைத்து இப்படி அராஜக வெறியாட்டத்தை நடத்தக்கூடிய திரு.ஸ்டாலின் அவர்கள் கடந்த காலங்களில் இதே காவல்துறையினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை அவர் மறந்துவிடக்கூடாது.

தன்னிடத்தில் ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்ற அடிப்படையிலே இப்படி காவல்துறையை சர்வாதிகார போக்கோடு பாரதிய ஜனதா கட்சியை நிர்வாகிகள் மீது கடுமையான ஒரு கொலைவெறி தாக்குதலை போன்று நடத்துவதற்கு அவர் பயணிப்பாரே ஆனால் அதை பார்த்துக்கொண்டு பாரதிய ஜனதா கட்சி இனிமேலும் சும்மா இருக்காது என்பதை நாங்கள் சொல்லிக் கொள்கிறோம் என தெரிவித்தார்.