என்  மண், என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சத்துணவுக்கு கொடுக்கப்பட வேண்டிய முட்டை ஒரு தனியார் கூடோன்ல இருக்கு.  பியூஸ் கோயல் அவர்கள் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மினிஸ்டர். இதற்கு முன்பு இன்னோரு இடத்துல தமிழகத்துல கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்துல ஒரு பள்ளியிலே கொடுக்கப்படவேண்டிய சத்துணவு முட்டை,  கடையில விற்றுகிட்டு இருக்காங்க.

ரேஷன்ல கொடுக்கப்படவேண்டிய அரிசி கேரளாவுக்கு கடத்தப்படுது. இதாங்க மேலே இருந்து கொடுப்பவர்கள்,   கொடுக்குறாங்க…  மஹாராசன் மோடி கொடுக்கிறார். 34 ரூபாய் அரசியை  32ரூபாய் மத்திய அரசு போட்டு,  அந்த பைக்காசு 2 ரூபாய் மாநில அரசு கொடுக்குது. அரிசி வருது,  நமக்கு வரவில்லை. முட்டை வருது,  நமக்கு வரவில்லை.கோழி முதல்ல வந்துச்சா ? முட்டை முதல்ல வந்துச்சா ? என கேட்கவேண்டிய இடத்துக்கு வந்துட்டோம்.அப்படிப்பட்ட ஊழல் ஆட்சி தமிழகத்துல நடந்து கொண்டிருக்கிறது.

இதையெல்லாம் அப்புறப்படுத்தி,  நேர்மையான நம்முடைய பாராளுமன்ற உறுப்பினர் நீலகிரிக்கு கிடைக்க வேண்டும். நிறைய பிரச்சனைகள் இருக்கக்கூடிய பாராளுமன்றம்  இது. இன்னைக்கு  அமைச்சர் அவர்கள் நேரா இங்கிருந்து விமான நிலையத்துல….   நீலகிரியின் தேயிலை தோட்டத்துல இருக்கக்கூடிய தொழிலாளர்கள்,  முதலாளிகளை சந்திக்கிறாங்க. விலை ஏற்றமுடியுமா ? என்று பரிசீலிக்குறாங்க. உங்களுக்காக ஒரு ஒரு நாளும் பாரதிய ஜனதா கட்சி சிந்தித்து வேலை செய்து கொண்டிருக்கிறது. ஆனால் இங்கு இருக்கக்கூடிய ஊழல் புகழ் 2G ராஜா என விமர்சனம் செய்தார்.