
செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, நாடாளுமன்ற தேர்தலில் தெளிவாக சொல்லிவிட்டேன். அண்ணா திமுக பாரதிய ஜனதா கூட்டணி இல்லை. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமையில் ஒரு சிறப்பான கூட்டணி அமையும். வலுவான கூட்டணி அமையும். 2024 மட்டுமல்ல, 2026லும் அண்ணா திமுக தலைமையில் சிறப்பான கூட்டணி அமையும். 2026லும் பாரதிய ஜனதா கட்சியோடு அண்ணா திமுக கூட்டணி இலை உறுதிப்பட சொல்லுகிறேன்.
இது வேண்டும் என்ற திட்டமிட்டு, திரு ஸ்டாலின் அவர்கள் மக்களை குழப்பி…. இன்றைக்கு அச்சத்தின் அடிப்படையில்… பயத்தின் அடிப்படையில்…. இன்றைக்கு அண்ணா திமுக பிஜேபியின் B-Teamஆக செயல்படுகின்றது என குற்றம் சுமத்துகின்றார். அது முற்றிலும் உண்மை இல்லை. இதே காங்கிரஸ், திமுக எப்படி இருந்தது என்று உங்களுக்கு நன்றாக தெரியும. காங்கிரஸ் ஆட்சியில் தான் எமர்ஜென்சி கொண்டு வந்தார்கள். அப்பொழுதுதான் மிசா என்ற சட்டத்தை கொண்டு வந்தார்கள். அதன் மூலமாக தான் ஸ்டாலின் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதைப் போல அங்கங்கே காட்சிப்படுத்தப்பட்டது.
பெரிய பெரிய சிட்டியில் கண்காட்சி நடத்தினார்கள். அதில் அவர்கள் ஜெயில் இருக்கின்ற மாதிரி காட்டினார்கள். அப்படிப்பட்டவர்களோடு இவர் கூட்டணி அமைக்கலாம். அப்படிப்பட்டவர்களோடு கூட்டணி அமைத்தவர தான் இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின். ஆக பதவிக்கு… அதிகாரத்திற்கு வரவேண்டும் என்று சொன்னால் எதை வேண்டுமானாலும் அவர்கள் செய்பவர்கள். எப்படிப்பட்ட அடிமைத்தனமானமாகவும் இருப்பார்கள்.
1999இல் பாரதிய ஜனதாவில் கூட்டணி. 5 வருடம் ஆட்சியை அனுபவித்தார்கள். மறைந்த முரசொலி மாறன் பேச்சு மூச்சு இல்லாமல் நோய் வாய்ப்பட்டு மருத்துவமனை சிகிச்சை பெற்றார். இலாக்கா இல்லாத அமைச்சராக இருந்தார். அப்பொழுது எல்லாம் பாரதிய ஜனதா கண்ணுக்கு தெரியவில்லை. ஆட்சி அதிகாரம் வந்தால் கண்ணை மறைத்து விடும்… அது குடும்ப கட்சி தான. ஆட்சி அதிகாரத்தை தான் பார்ப்பார்கள்…. மக்களைப் பற்றியா பார்ப்பார்கள்…உடனே காங்கிரசுக்கு தாவிட்டார். காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்தார்.