மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் 10 மற்றும் 12ஆம் படித்தவர்களுக்கான ஒருங்கிணைந்த உயர்நிலை தேர்வு 2022 அறிக்கையை சென்ற டிசம்பர் மாதம் அறிவித்தது. பல மத்திய அரசுத் துறைகளில் ஏறத்தாழ 4,500 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஜனவரி 4ம் தேதி(இன்று) தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் 18-27 வயதுடையவர்கள் தேர்வெழுத தகுதி பெற்றவர்கள் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னாள் ராணுவத்தினர், எஸ்.சி. எஸ்.டி, வகுப்பினர் உள்ளிட்டோர் மற்றும் பெண்கள் போன்றோருக்கு தேர்வுக் கட்டணமில்லை. ஆனால் மற்றவர்கள் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் எஸ்.எஸ்.சி தேர்வாணையம் தெரிவித்து உள்ளது. ஜனவரி 4ம் தேதி இன்றுடன் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு பணியை கனவாக கொண்டுள்ள தமிழக இளைஞர்கள் தேர்வை நல்வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளலாம்.