அதிமுகவினுடைய பொதுக்குழு கூட்டம் நடந்தததில் எடுக்கப்பட்ட முடிவுகள் சரியா ? தவறா ?  என்பது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தின் வழக்கு விசாரணையானது தற்பொழுது தொடங்கி நடைபெற்று வருகிறது. நீதிபதிகள் இந்த விசாரணையை சரியாக 2 மணி அளவில் தொடங்கி இருக்கக்கூடிய இந்த வழக்கின் வாதம் என்பது இன்று நாள் முழுவதும் நான்கு மணி அல்லது அதற்கு மேலும் கூட செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏனென்றால் இந்த வழக்கை விரிவான விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு தற்பொழுது நீதிபதிகள் முடிவெடுத்திருக்கிறார்கள். அதற்காகத்தான் வழக்கில் யார் யாரெல்லாம் மனுதாரர்களாக சேர்ந்து இருக்கிறார்கள் ? யார் யாரெல்லாம் எந்தெந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை தாக்கல் செய்திருக்கிறார்கள் ? அதிமுகவினுடைய அடிப்படை விதிமுறைகள் என்ன ? இந்த பொதுக்குழு கூட்டப்பட்டது எப்படி ? உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பதிவு செய்து வருகிறார்கள்.

குறிப்பாக  அதிமுகவில் இருக்ககூடிய விதிமுறைகள், அதற்கான குறியீட்டு எண்களை சொல்லி அவை அனைத்தும் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி சார்பில் தரப்பினர் தற்போது வாதங்களாக முன்வைத்து வருகிறார்கள். நீதிமன்ற விசாரணை காரணமாக கட்சி பணிகள் தேக்குமடைந்திருப்பதாக பழனிசாமி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு இடைக்கால உத்தரவுகள் சிலவற்றையில் கவனம் செலுத்தி வருகிறோம் என நீதிபதிகள் தெரிவித்து இருக்கின்றனர்.