தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று  அக்கட்சியின்  தலைமையகமான கமலாலயத்தில் செய்தியாளர் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ச்சியாக கேள்விமேல் கேள்வி கேட்டு  பரபரப்பான சூழல் நிலவிய நிலையில் அண்ணாமலைக்கும் செய்தியாளர்களுக்கு வாக்குவாதம் முற்றியது. ஒரு கட்டத்தில் யூடியூப் சேன்னலுக்கு கேள்வி கேட்க என்ன உரிமை இருக்கின்றது என ஆவேசமாக கேட்டார்.

அண்ணாமலையில் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலைக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அண்ணாமலை தொடர்ந்து பத்திரிகையாளரை இழிவு படுத்துவதாக பத்திரிக்கையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. நாகரீக உறவை ஊடகங்களுடன் பேனா கற்றுக்கொள்ள வேண்டும்.

ஊடகவியலாளர் செய்தி சேகரிக்கும் பணி குறித்து அவதூறு செய்வது ஆரோக்கியமான செயல் அல்ல. நிதானமற்ற போக்கு கட்சியின் தலைவருக்கு அழகல்ல. இந்த மோசமான அணுகுமுறை மிரட்டல் போக்குக்கு கண்டனம் என  சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.