வடகொரிய நாட்டின் அச்சுறுத்தலுக்கு பதிலடி தரும் வகையில், தென்கொரியா அமெரிக்க நாட்டுடன் சேர்ந்து அணு ஆயுத போர் பயிற்சி மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டு அதிபர் தகவல் வெளியிட்டுள்ளார்.

வடகொரியா தொடர்ந்து ஜப்பான், தென் கொரியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளை அச்சுறுத்தும் விதமாக ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், கொரிய எல்லையில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில் தென் கொரிய அதிபரான யூன் சுக் இயோல் இது பற்றி தெரிவித்திருப்பதாவது, வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி  தரும் வகையில், அமெரிக்க நாட்டின் அணு ஆயுதங்களை உள்ளடக்கியிருக்கும் கூட்டுப்போர் பயிற்சி மேற்கொள்ள திட்டமிட்டு இருக்கிறோம். இது பற்றி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.